பட்டாசு தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து..!

245

தெலங்கானா மாநிலத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட தீ, மளமளவென பரவியது. உள்ளே வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் வெடித்ததால், அந்த பகுதியே தீப்பிழம்பாக காட்சி அளித்ததோடு, கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் 11 பேர் உடல் சிதறி பலியானார்கள்.

பலத்த தீக்காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. வெடி விபத்து நிகழ்ந்த பகுதியில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.