பெட்ரோல், டீசல் விலை உயர்வு..!

365

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படும் நிலையில், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 17 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 82 ரூபாய் 41 காசுகளாகவும், டீசல் விலை 20 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 75 ரூபாய் 39 காசுகளாகவும் உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து சாமானிய மக்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.