மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 23 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

270

மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 23 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் பணியைப் போற்றும் வகையிலும், தேசிய நல்லாசிரியர்களை கவுரவிக்கும் வகையிலும் மத்திய அரசு ஆண்டுதோறும் தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருது ஐம்பதாயிரம் ரொக்கம், வெள்ளிப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றுடன் வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு நடப்பாண்டில், தமிழகத்தில் இருந்து 23 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, டெல்லியில் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் ஆசிரியர் தினவிழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நல்லாசிரியர் விருதுகளை வழங்கி ஆசிரியர்களை கவுரவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.