சக மாணவர்கள் முன்னிலையில் அதிர்ச்சி சம்பவம்..!

281

ராஜஸ்தானில் பள்ளி மாணவரை வகுப்பில் வைத்து ஆசிரியர் கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் டவுஸா மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவரை, உடற்கல்வி ஆசிரியர் ஜனமோகன் மீனா என்பவர் வகுப்பறையில் வைத்து கொடூரமாக தாக்கியுள்ளார். மாணவர் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டாததை அடுத்து, ஆசிரியர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, மாணவனின் பெற்றோர்கள் அளித்த புகாரின்பேரில், ஆசிரியர் ஜனமோகன் மீனாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனிடையே, ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாணவனை, ஆசிரியர் தாக்குல் காட்சிகள் தற்போது வீடியோவில் வைரலாக பரவி வருகிறது.