அமெரிக்காவின் வரி உயர்வுக்கு இந்தியா பதிலடி..!

264

அதிபர் டிரம்பின் வரி உயர்வுக்கு பதிலடி தரும் விதமாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கான சுங்க வரியை இந்தியா அதிகரித்துள்ளது.

சீனா – அமெரிக்கா இடையே வர்த்தக போர் முற்றியுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இதற்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகள், உலோகப் பொருட்களுக்கு சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது. பருப்பு வகைகளுக்கான வரி 60 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களுக்கான வரி 10 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. வரி உயர்வு ஆகஸ்டு 4ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.