திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கொள்ளை..!

171

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் கொள்ளை அடித்த நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த காரனோடை அருகே, டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. நேற்றிரவு கடையை மூடிவிட்டு ஊழியர்கள் சென்ற பின்னர், கடையின் சுவற்றில் துளையிட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை எடுத்து சென்றுள்ளனர். காலையில் வழக்கம் போல கடைக்கு வந்த சிலர், கொள்ளை பற்றி மேற்பார்வையாளர் ரமேஷுக்கு தகவல் அளித்தனர். பின்பு அங்கு வந்த ரமேஷ், டாஸ்மாக் கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து, சோழவரம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். இது குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார், கொள்ளையில் ஈடுபட்டோரை தேடி வருகின்றனர்.எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் தேசிய நெடுஞ்சாலை டாஸ்மாக் கடையில் நடைபெற்ற கொள்ளை, மக்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.