tasmac fire accident

திருவள்ளூர் அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 14 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் சேதம் அடைந்தன..

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் சாலையில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை உள்ளது. ஊழியர்கள் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் அதிகாலை கடையில் இருந்து புகை வந்துள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவர்கள் பலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் சேதம் அடைந்தன. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.