வரும் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் !

282

மக்களவை தேர்தலை முன்னிட்டு வரும் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 18ம் தேதி 39 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்நிலையில் வரும் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.