மதுரையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை பெண்கள் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது

412

மதுரையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை பெண்கள் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது
மதுரை மாவட்டம் கூடல்நகரில் உள்ள மதுக்கடையால் அந்த வழியாக செல்லும் பெண்களுக்கு இடையூறாக இருப்பதாக புகார்கள் கூறப்பட்டு வந்தன. எனவே, கடையை அகற்றக்கோரி பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பெண்கள், டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். கடையில் இருந்த மதுபாட்டில்களை சாலையில் தூக்கி எறிந்து உடைத்த அவர்கள், தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.
பின்னர் அருகில் இருந்த பாரில் நுழைந்த அவர்கள், உள்ளே அமர்ந்து மது அருந்தியவரை கடுமையாக தாக்கினர். இதையடுத்து அங்கிருந்த நாற்காலிகள், தண்ணீர் பாட்டில்கள் உட்பட அனைத்து பொருட்களையும் சூறையாடினர்.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை பாரில் வைத்து பூட்டினர். பின்னர் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.