தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் வரும் அக்டோபர் மாதம் தேர்தலை நடத்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

427

தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் வரும் அக்டோபர் மாதம் தேர்தலை நடத்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளில் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதியாகும். இதனையடுத்து, தேர்தல் அதிகாரிகள், தமிழகத்தில் காலியாக உள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் எப்போது தேர்தல் நடத்துவது என ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனிடையே, அக்டோபர் மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருவதால், அதற்கு முன்னதாக இந்த 3 தொகுதிகளில் தேர்தலை நடத்திட தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்தவுடன், தமிழக அரசு மற்றும் அனைத்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தி, தேர்தல் தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்கவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனையடுத்து, இந்த 3 தொகுதிகளின் தேர்தல் தேதி செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.