தஞ்சாவூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் போட்டியிட வரும் 20ஆம் தேதி விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என திமுக அறிவித்துள்ளது.

249

தஞ்சாவூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் போட்டியிட வரும் 20ஆம் தேதி விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என திமுக அறிவித்துள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திமுக பொருளாளர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தஞ்சாவூர், கரூர் மற்றும் மதுரை மாவட்ட செயலாளர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். கூட்டத்தில், தேர்தலை எப்படி எதிர்கொள்வது, வேட்பாளர் தேர்வு செய்வது மற்றும் பணப்பட்டுவாடாவை தடுப்பது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதனிடையே, திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக சார்பில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 20ஆம் தேதி விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 21ஆம் தேதி வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.