எட்டு வழி சாலைத் திட்டத்தை திமுக எதிர்க்கவில்லை – தலைவர் ஸ்டாலின்

394

எட்டு வழிச்சாலை திட்டத்தை திமுக எதிர்க்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மக்கள் கருத்தை கேட்ட பிறகு மாற்று பாதையில் செயல்படுத்த வேண்டும் என்பதே கோரிக்கை எனக் கூறியுள்ளார்.

திருவெறும்பூர் தொகுதி திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லத் திருமண விழா தஞ்சையில் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் அதிக அளவில் போராட்டங்கள் நடப்பதாக கூறும் முதலமைச்சர், அதுகுறித்து சிந்தித்து பார்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். சேலம்- சென்னை 8 வழிச்சாலை தேவையில்லை என்று திமுக கூறவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்தார்.

இதைத்தொடர்ந்து, சென்னை வந்த ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்கு மத்திய அரசு பணிந்து விடக் கூடாது எனக் கேட்டுக் கொண்டார். அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்டி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.