தஞ்சை அருகே, 44பேர் உயிரிழந்த சம்பவத்தின் 48ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

234

கடந்த 1968ம் ஆண்டு, தஞ்சை மாவட்டம், கீழ்வெண்மணி கிராமத்தில்,நிலச்சுவான்தாரர்களுக்கும், விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் இடையேயான பிரச்சினை உச்ச கட்டத்தை அடைந்தது. இந்நிலையில் டிசம்பர் 25ம் நாள், , கீழ்வெண்மணி கிராமத்தில்,நாட்டு துப்பாக்கிகளுடன் புகுந்த சிலர் , அங்கிருந்த விவசாயிகளின் மீது தாக்குதல் நடத்தினர். பயந்த 48 விவசாயிகள் அங்கிருந்த குடிசைக்குள் ஓடி ஒளிந்தனர். அந்த குடிசைக்கு ஆதிக்க சமுதாயத்தினர் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இந்த தீ வைப்பு சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் 48வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி ஏராளமான பொது மக்கள் உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.