தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மத்திய நிபுணர் குழு ஆய்வு… காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என சித்தராமையா நம்பிக்கை

178

காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட உயர்மட்ட குழுவினர் கர்நாடகத்தில் உள்ள கே.ஆர்.எஸ். கபினி, ஹேமாவதி, ஹாராங்கி ஆகிய நான்கு அணைகளின் நீர் இருப்பு, நீர்வரத்து ஆகியவற்றை ஆய்வு செய்ததை சுட்டிக்காட்டினார். இதேபோன்று, தமிழகத்திலும் நிபுணர் குழுவினர் ஆய்வு செய்துள்ளதாக கூறிய சித்தராமையா, தங்கள் ஆய்வறிக்கையை அவர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக கூறினர்.
இதன் மூலம் கர்நாடக அணைகளின் நீர்இருப்பு குறித்த உண்மை தெரியவரும் என்று தெரிவித்த அவர், காவிரி தொடர்பான வழக்கில் கர்நாடகத்துக்கு சாதமாக தீர்ப்பு வரும் என்றும் சித்தராமையா தெரிவித்தார். மகதாயி நதிநீர் பிரச்சனை தொடர்பாக விவாதிப்பதற்காக மும்பையில் வரும் 21 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நான்கு மாநில முதலமைச்சர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறினார்.