தமிழக அரசை விமர்சித்த கமல்ஹாசனுக்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது..!

345

தமிழக அரசை விமர்சித்த கமல்ஹாசனுக்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது. முக்கிய தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் கமலுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சென்னை சேத்பட்டில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற புதுச்சேரி துணைநிலை ஆளுனர் கிரண்பேடி பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஊழலுக்கு எதிராக யார் பேசினாலும், ஆதரவு தர வேண்டும் என்று தெரிவித்தார். ஊழல் செய்பவர்கள் மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடிப்பதாக கூறிய அவர், பணம் ஒன்றும் மரத்தில் விளையவில்லை, உழைப்பினால் கிடைக்கிறது என்றும் தெரிவித்தார். ஆனால் ஊழல் செய்பவர்கள் பணத்தை திருடுவதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசைப்பற்றி கமல் சொன்னது முழுவதும் உண்மை என்று கூறினார். தமிழ்நாட்டில் எல்லா துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாக கூறிய அன்புமணி ராமதாஸ், இதனை முன்கூட்டியே பாமக எடுத்துரைத்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.