Chennai

பசுமை வழிச்சாலை அமைக்கப்பட்டால் சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜி.எஸ்.டியால் தமிழக அரசுக்கு அதிக வருவாய் கிடைத்திருப்பதாக கூறினார். சிறு, குறு தொழில் வளர்ச்சியடைய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். ரவுடிகளால் காவல்துறையினர் தாக்கப்படுவது வேதனையளிப்பதாக கூறிய அவர், போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாமானியர்களால் என்ன செய்ய முடியும் என கேள்வியெழுப்பினார். தொடர்ந்து பேசிய தமிழிசை, பசுமை வழிச்சாலை அமைக்கப்பட்டால் சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.