தமிழக மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் நல்வாழ்த்து தெரிவித்துள்ளார்!

92

தமிழக மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் நல்வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்ற கூட்டம் ஆக்கப்பூர்வமாக நடைபெற்றதாகவும், மதுசூதனன் கடிதம் உட்கட்சி பிரச்சினை எனவும் குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து கோவை சென்ற முதலமைச்சருக்கு, விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பட்டாசு உற்பத்தியாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
விமான நிலைய வளாகத்தில் குத்துவிளக்கேற்றிய முதலமைச்சர் உறியடித்து பொங்கல் கொண்டாட்டங்களை துவக்கி வைத்தார்.