advocate

தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மருத்துவ சான்றிதழை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்வதை காட்டாயமாக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், சட்டத்தை உருவாக்கும் மக்கள் பிரதிநிதிகள் ஏன் மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்கக் கூடாது? என கேள்வி எழுப்பினார். தமிழக அரசியலில் மாற்றத்திற்கான நேரம் வந்து விட்டதாகவும், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கிருபாகரன் வலியுறுத்தினார். கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு இருந்த வரவேற்பு போன்று தற்போது யாருக்கும் இல்லை என்று சுட்டிக்காட்டிய அவர்,

நில அபகரிப்பாளர்கள், குண்டர்களுக்கு வாய்ப்பளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஒரு லட்சம் வாக்காளர்கள் கையெழுத்திட்டால் தான் அரசியல் கட்சியை பதிவு செய்ய வேண்டும் என தகுதி நிர்ணயிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் கொண்டு வந்த தேர்தல் சீர்திருத்தத்தை தேர்தல் ஆணையம் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி கிருபாகரன் வலியுறுத்தினார்.