தமிழக மக்களுக்கு தண்ணீர் திறந்துவிடமுடியாது கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டம் !

395

தமிழக மக்களுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் உயர் மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இதில் காவிரி நீர் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் சித்தராமையா தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். போதிய மழை இல்லாததால் கர்நாடகா மக்களுக்கு, குடிநீர் தேவைக்காக மட்டுமே அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதாகவும் கூறினார். மழையின் அளவு நீர் வரத்தை பொறுத்தே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடமுடியும் என்றும் சித்தராமையா தெரிவித்தார்.