அமித்ஷா கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது – தமிழிசை

1005

தமிழகத்தில் நிலவும் ஊழலை அப்புறப்படுத்தும் பணியில் பா.ஜ.க ஈடுபட்டு வருவதாகவும், அமித்ஷா கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் தமிழிசை தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஒவ்வொரு பள்ளியிலும் பண்பாட்டு வகுப்புகள் இருக்க வேண்டும் என்று கூறினார். 10 முதல் 12ம் வகுப்புகளுக்கு டிஜிட்டல் வகுப்பறைகளை மத்திய அரசு கொண்டுவருவதாகவும் தெரிவித்தார். கடத்தப்பட்ட சிலைகளை கண்டுபிடிக்கும் நோக்கில் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய தமிழிசை,
ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையில் சாதகம், பாதகத்தை ஆராய்ந்தே மத்திய அரசு செயல்படுத்தும் என்றும் உறுதியளித்தார்.