தமிழகத்தில் பல தீவிரவாத அமைப்புகள் மையம் கொண்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் ..

210

தமிழகத்தில் பல தீவிரவாத அமைப்புகள் மையம் கொண்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை அரசின் சட்ட மசோதா தமிழக மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினார். தமிழகத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் உட்பட பல தீவிரவாத அமைப்புகள் மையம் கொண்டுள்ளதாக கூறிய பொன்.ராதாகிருஷ்ணன், இதனை உளவுத்துறை மூலம் தீவிரமாக கண்காணித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.