தமிழகத்திற்கு நடிகர் தேவையில்லை என்று நிர்வாக திறமையுள்ள நபரே அவசியம் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

332

தமிழகத்திற்கு நடிகர் தேவையில்லை என்று நிர்வாக திறமையுள்ள நபரே அவசியம் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் பற்றி குறிப்பிட்டுள்ள அவர், ரஜினி என் இனிய நண்பர் . நல்ல நடிகர். அவர் நடிப்பை பார்ப்போம் ரசிப்போம். தமிழகத்திற்கு தேவை நடிகர் அல்ல. நல்ல நிர்வாக திறமையுள்ள நபர். தமிழகத்திற்கு நடிகர் வேண்டாம். டாக்டர் தான் வேண்டும்.தமிழகம் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது. கடனில், ஊழலில் தத்தளிக்கிறது. இந்தியாவில் தமிழகம் கடைசி இடத்தில் உள்ளது. வேளாண் வளர்ச்சி எதிர்மறையாக உள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் 21வது இடத்தில் உள்ளது. 1.5 கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். தமிழக உரிமைகளை இழக்கிறோம். இச்சூழலில் நடிகர்கள் ஒன்றும் செய்ய முடியாது. கடந்த காலத்தில் தமிழகத்தை நடிகர்களிடம் ஒப்படைத்து நாசப்படுத்திவிட்டனர். எம்.ஜி.ஆர்., நடிகர், ஜெயலலிதா நடிகர். நடிகர்கள் தமிழகத்தை ஆட்சி செய்து நாசப்படுத்தினர். நடிகர்கள் தமிழகத்தை ஆண்டது போதும், நாட்டில் வேறு எங்கும் 50 ஆண்டுகள் ஆட்சி செய்தது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.