தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

600

வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழக கடலோரம் வளிமண்டல மேல் அடுக்க சுழற்சி நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்ய கூடும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.