தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம்!

192

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இதனால், தமிழக முழுவதும் ஆங்காங்கே சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நல்ல மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.