மின் கட்டணம் எளிதாக செலுத்த புதிய கைபேசி செயலி சேவையை தமிழ்நாடு…

1472

மின் கட்டணம் எளிதாக செலுத்த புதிய கைபேசி செயலி சேவையை தமிழ்நாடு மின்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய செயலியை மின்துறை அமைச்சர் தங்கமணி அறிமுகப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின் நுகர்வோர்கள் மின் கட்டணம் எளிதில் செலுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் எடுத்து வருவதாக தெரிவித்தார். இதுவரை வங்கிகள், தபால்நிலையங்கள், வங்கி ஏடிம் மையங்கள் மற்றும் வலைதள வங்கிகள் மூலமாக மின் கட்டணத்தை நுகர்வோர் செலுத்தி வந்ததாக கூறிய தங்கமணி, எளிமையாக, பாதுகாப்பாக நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்துவதற்கான புதிய கைபேசி செயலியை அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார். இதன் மூலம், 2 கோடியே 7 லட்சம் நுகர்வோர்கள் பயன் பெறுவார்கள் என்று அவர் கூறினார்.