தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது-ஜெ. தீபா,எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை செயலாளர் !

335

தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருவதாக, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை செயலாளர் ஜெ. தீபா குற்றம்சாட்டி உள்ளார்.
மாணவி அனிதாவின் குடும்பத்தினரை தீபாவும், அவரது கணவர் மாதவனும் சந்தித்து ஆறுதல் கூறினார். ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய தீபா, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். ஜெயலலிதா இருந்து இருந்தால் அனிதாவின் மரணம் நிகழ்ந்து இருக்காது என்று குறிப்பிட்ட அவர், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சட்டப்பேரவைக்கு தேர்தல் வந்தால் 234 தொகுதிகளிலும் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று தீபா தெரிவித்தார்.