தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் ஒரே நாளில் சுமார் 32 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து சாதனை !

405

தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் ஒரே நாளில் சுமார் 32 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது.
தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம், பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி, பால் உற்பத்தியாளர்களை ஊக்குவித்து, தரமான பாலுக்கு தகுந்த விலை கொடுத்து வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் சுமார் 32 லட்சம் பால் கொள்முதல் செய்து, புதிய சாதனையை ஆவின் நிறுவனம் படைத்துள்ளது. இதேபோன்று, வரும் நாட்களில் அதிக பால் கொள்முதல் செய்யப்படும் என்று நிர்வாக இயக்குநர் காமராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.