தமிழக அரசு ஊழல் நிறைந்த அரசாக திகழ்கிறது – ஓ.பன்னீர் செல்வம்!

329

தமிழக அரசு ஊழல் நிறைந்த அரசாக திகழ்வதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இரு அணிகள் இணைப்பு விவகாரத்தில் எங்கள் முடிவை ஏற்கனவே தெரிவித்து விட்டோம் என்று கூறினார். அமைச்சர்கள் மட்டுமே இணைப்பு குறித்து பேசி வருவதாகவும் எடப்பாடி அணியிலிருந்து தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.