தற்போதைய சூழலில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க இயலாது -தமிழக ஆளுநர்!

335

தற்போதுள்ள சூழலில் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று, தமிழக ஆளுநர் மறுப்புத் தெரிவித்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், தொல்.திருமாவளவன், ஜவாஹிருல்லா ஆகியோர் ஆளுநர் வித்யாசாகர ராவை இன்று சந்தித்து கோரிக்கை விடுத்தனர். ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்க தமிழக ஆளுநர் மறுப்புத் தெரிவித்து விட்டார். ஆளுநரை சந்தித்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் வித்யாசாகர் ராவ் தெரிவித்த விவரங்களை விளக்கினர்.