ஒன்றுபட்ட அதிமுக ஆளும் ஆட்சியாளர்களுக்கு வலு சேர்ப்பதாக தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் – ஜி.கே.வாசன்!

315

ஒன்றுபட்ட அதிமுக ஆளும் ஆட்சியாளர்களுக்கு வலு சேர்ப்பதாக தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு அணிகளும் ஒன்றாகியுள்ள நிலையில், ஆட்சியாளர்கள் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர்,
அரசின் திட்டங்களை ஒரு காலக்கெடுவுக்குள் முடித்து நிறைவேற்றக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என்றார்.
ஒன்றுபட்ட அதிமுக ஆளும் ஆட்சியாளர்களுக்கு வலு சேர்ப்பதாக கூறியுள்ள அவர்,
மக்களின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக மத்திய அரசுக்கு வலுவான குரல் கொடுத்து தமிழக நலன் காக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.