தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கும் பா.ஜ.கவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

216

தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கும் பா.ஜ.கவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை வைத்து நீட் தேர்வில் வினாக்கள் கேட்கப்படுவதாக தெரிவித்தார். இதனால், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறிய அவர், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு பலவீனமான இருப்பதாக தெரிவித்தார்.அதிமுகவின் 3 அணிகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பா.ஜ.க. முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டிய திருநாவுக்கரசர், தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கும் பிரதமர் மோடியின் கனவு ஒரு போதும் பலிக்காது என்று கூறினார்.