தமிழகத்தின் இன்று பல்வேறு இடங்களில் அதிகாலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தளனர்.

257

தமிழகத்தின் இன்று பல்வேறு இடங்களில் அதிகாலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தளனர்.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பகல்நேரத்திலேயே முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர். மேலும் முக்கிய சுற்றுலா இடங்களான பைன் மரக்காடு, குணா குகை, பில்லர் ராக் நட்சத்திர ஏரி போன்ற பகுதிகளில் பனி மூட்டம் கடுமையாக காணப்பட்டது. இதனால் எழில் சூழ்ந்த காட்சிகளை பார்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

இதே போல் கிருஷ்ணகிரியிலும் இன்று அதிகாலை முதல் கடும் பனி மூட்டம் நிலவியது. குறிப்பாக கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டிணம், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சாலையில் சென்றன. இதே போல் பேச்சாம்பள்ளி, பாரூர், புலியூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இன்று காலை முதல் கடும் பனி நிலவியது.

திருவாரூர் மாவட்டத்தில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு கடுமையான பனிமூட்டம் சூழ்ந்து கொண்டது. இதனால் வாகன ஓட்டிகளும், காலையில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். திருவாரூரில் உள்ள மிகப்பெரிய குளமான கமலாலய திருக்குளம் பனிமூட்டத்தால் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு மறைந்தது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் அதிகாலை நிலவி வரும் பனிப்பொழிவால் வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே பெய்து வரும் பனிப்பொழிவால் பயிர்களில் நோய் ஏற்பட்டு மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.