தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்த நிலையில் செப்டம்பர் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

205

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்த நிலையில் செப்டம்பர் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் 5 ஆண்டுகளாக பதவி வகித்தவர்களின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து 12 மாநகராட்சி, 123 நகராட்சி, 529 பேரூராட்சி, 12 ஆயிரத்து 527 ஊராட்சி ஆகிய அமைப்புகளுக்கு தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்ட நிலையில், இதற்காக தமிழக அரசு 183 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் முதன் முதலாக 50 சதவீதம் இட ஒதுக்கீடு பெண்களுக்கு தரப்பட்டுள்ளது என்றும் அதன்படி பெண்கள் போட்டியிடுவதற்கான வார்டுகளை பிரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையில் ஆயிரத்து 200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி வீதம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கும் பணிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தேர்தலுக்காக ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்களை இட மாற்றம் செய்வதற்கான பட்டியலும் தயாராகி வருகிறது. அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தலுக்கான 90 சதவீதம் பணிகள் முடிவடைந்துவிடும் நிலையில் உள்ளதால், சட்டசபை கூட்டம் முடிந்தபிறகு வரும் செப்டம்பர் முதல் வாரமே தேர்தல் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதற்கிடையே உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகிவுள்ளது.

உள்ளாட்சி தேர்தல்:
5 ஆண்டுகளாக பதவி வகித்தவர்களின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது.
12 மாநகராட்சி, 123 நகராட்சி, 529 பேரூராட்சி, 12,527 ஊராட்சிகளுக்கும் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு. தமிழக அரசு 183 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு பெண்கள் போட்டியிடுவதற்கான வார்டுகளை பிரிக்கும் பணி தீவிரம்.
1,200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி வீதம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கும் பணி தீவிரம்.
ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்களை இடமாற்றம்.
90% பணிகள் முடிந்துவிட்டதால்
செப்டம்பர் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு.
வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகள் ஆய்வு.