தமிழகத்தில் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி குறைக்கப்பட்டுள்ளது.

224

தமிழகத்தில் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி குறைக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி வரி காரணமாக மூன்று மாதங்களாக சினிமாவுக்கான கேளிக்கை வரி சினிமா டிக்கெட்களுடன் சேர்த்து வசூலிக்கப்பட்டு வந்தது. இதனிடையே தமிழகத்தில் சினிமாவுக்கான கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி திரையரங்க உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் திரைப்படங்களுக்கான புதிய கேளிக்கை வரி கடந்த 27-ம் அமலுக்கு வந்தது. புதிய தமிழ் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியை 30லிருந்து 10 சதவீதமாக குறைத்தும், மற்ற மொழி படங்களுக்கு 20 சதவீதம் வரி விதித்தும் மத்திய அரசு அறிவித்தது. பழைய தமிழ் திரைப்படங்களுக்கு 7 சதவீதமும், மற்ற மொழி பழைய திரைப்படங்களுக்கு 14 சதவீதமும் கேளிக்கை வரிவிதிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.