தமிழகத்தில் நாளை நடைபெறும் முழுஅடைப்பு போராட்டம் காரணமாக தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

324

தமிழகத்தில் நாளை நடைபெறும் முழுஅடைப்பு போராட்டம் காரணமாக தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதலை கண்டித்து தமிழகத்தில்
நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், முழுஅடைப்பு காரணமாக தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக
தமிழ்நாடு நர்சரி, பள்ளிகளின் சங்கத்தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
முழுஅடைப்பு போராட்டம் காரணமாக தமிழகத்தில் உள்ள 18 ஆயிரம் தனியார் பள்ளிகள் நாளை இயங்காது என கூறியுள்ளார். இதற்கு பதிலாக நாளை மறுநாள் சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவின் செயல்பாடுகளை கண்டித்தும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தியும் 16ஆம் தேதி முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்துக்கு திமுக, தேமுதிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், த.மா.கா., விடுதலை சிறுத்தைக்கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இதேபோன்று, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை, விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு, பால் முகவர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளன.


தமிழகத்தில் நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் அசாம்பாவிதங்களை
தடுக்க 1 லட்சம் காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணக்கோரியும், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழகத்தில் நாளை முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஒரு லட்சம் காவலர்கள் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.