தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

328

தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்தநிலையில், நல்ல மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.