இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதியான மாநிலம் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலடிக் கொடுத்துள்ளார்..

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கோ ஆப்டெக்ஸ் ஆடையகத்தின் புதுப்புக்கப்பட்ட விற்பனையகத்தை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்வர் நாற்காலியில் அமர முடியாததால் ஸ்டாலின் புலம்பி வருவதாக விமர்சித்தார். இந்நிலையில் இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதியான மாநிலம் என்று சுட்டிக் காட்டிய அவர், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பொறுப்புணர்ந்து பேச வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் மேட்டூர் அணை 80 அடியை எட்டியதும் நீர் திறந்துவிடப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உறுதியளித்துள்ளார்.