தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு | ஜனவரி 17ம் தேதி பொன்விழா கொண்டாடப்படுகிறது.

94

தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ஜனவரி 17ம் தேதி பொன் விழா கொண்டாடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்த முதல்வர் பழனிசாமி, கடந்த 1969 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டதை குறிப்பிட்டார். இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவுபெறுவதாக கூறிய பழனிசாமி, தமிழக அரசை இதனை பொன் விழாவாக கொண்டாட முடிவு செய்திருப்பதாக அறிவித்தார். ஜனவரி 17ம் தேதி அன்று பொன் விழா கொண்டாடப்படும் என்றும், விழாவின் நிறைவில் இளம் தமிழ் ஆய்வாளர்கள் சிறப்பிக்கப்படுவார்கள் என்றும் கூறினார். பொன்விழாவையொட்டி மாணவர்களுக்கு கட்டுரை கவிதை, போட்டிகள் நடத்தப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.