தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் பெறப்பட்ட எம்.ஃபில்., பி.எச்டி. பட்டங்களை அங்கீகரிக்க கோரிக்கை ..!

503

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நேரடி முறையில் பெறப்பட்ட எம்.ஃபில், பி.எச்டி. பட்டங்கள், அரசு நிறுவனங்களில் பணி நியமனத்திற்கு ஏற்புடையது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு முதன்மைச் செயலாளர் சுனீல்பாலீவால் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட எம்.ஃபில்., பி.எச்டி. பட்டங்களை அரசு நிறுவனங்களில் பணி நியமனத்திற்கு ஏற்புடையதாக அங்கீகரிக்க கோரிக்கை விடுத்துள்ளது சுட்டுக்காட்டப்பட்டுள்ளது.
திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளரின் கோரிக்கையை அரசு கவனமுடன் ஆய்வு செய்துள்ளதாகவும், இதன்படி, 10 மற்றும் 12 ஆம் வகுப்பை தொடர்ந்து, யூ.ஜி.சி.யால் அங்கீகரித்த பல்கலைக்கழகத்தில் பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் நேரடி முறையில் முழு நேரம் மற்றும் பகுதி நேரத்தில் சேர்ந்து எம்.ஃபில். பி.எச்டி பட்டங்கள் பெற்றிருக்க வேண்டும் என்றும் அவ்வாறு பெறப்பட்ட எம்.ஃபில். பி.எச்டி பட்டங்கள் அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு ஏற்புடையது என்றும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.