தமிழகத்தில் மீண்டும் மதுக்கடை திறக்கப்படுவது கண்டிக்கதக்கது – குமரி ஆனந்தன்!

251

தமிழகத்தில் மீண்டும் மதுக்கடை திறக்கப்படுவது கண்டிக்கதக்கது என காங்கிரஸ் மூத்த தலைவரான குமரி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு சொட்டு மது கூட தமிழகத்தில் இருக்க கூடாது என்பதே பொதுமக்களின் நோக்கம் என்று குறிப்பிட்டார். மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்படுவது அரசின் கொச்சையான செயல் என்று விமர்சித்த குமரி அனந்தன், பாரத தாய் கோயிலை தமிழக அரசு ஏன் கட்டவில்லை என கேள்வி எழுப்பினார். ஜெனிவா மாநாட்டில் வைகோ தாக்கப்பட்டது கொடுமையான செயல் என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.