தமிழகத்துக்கு காவிரியில் 2 ஆயிரம் கனஅடி நீரை திறந்து விட முடியாது என்று கர்நாடகம் மீண்டும் மறுத்துள்ளது.

190

தமிழகத்துக்கு காவிரியில் 2 ஆயிரம் கனஅடி நீரை திறந்து விட முடியாது என்று கர்நாடகம் மீண்டும் மறுத்துள்ளது.
காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், அடுத்த உத்தரவு வரும் வரை தமிழகத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் பாட்டில், காவிரி படுகையில் உள்ள நான்கு நீர்த் தேக்கங்களிலும் தண்ணீர் மிக குறைவாக இருப்பதாக தெரிவித்தார். இந்த சூழலில் எப்படி தண்ணீர் திறந்து விட முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக கூறினார்.

கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து இருப்பதால், ராணுவத்தின் துணையுடன் காவிரியில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.