தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் துணை ஆட்சியராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு ..!

358

தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் துணை ஆட்சியராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் முதன்மை செயலர் செந்தில் குமார் உத்தரவின் பேரில், திருக்கோவிலூர்- சாரூஸ்ரீயும், திண்டிவனத்தில் மெர்சி ரம்யாவும், பழனியில் அருண்ராஜ் ஆகியோர் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
துாத்துக்குடியில் பிரசாந்த், பத்மநாபபுரத்தில் ராஜகோபால் சுங்குரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல்லில் கிரந்திகுமார் பட்டி, மயிலாடுதுறையில் பிரியங்கா, பரமக்குடியில் சந்திரன் ஆகியோர் துணை ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளனர்.
இதேபோல், புதுக்கோட்டையில் சரயு, திருச்சியில் கமல் கிஷோர், ராமநாதபுரத்தில் விஷ்னுசந்திரன் ஆகியோரை துணை ஆட்சியராக நியமித்து செந்தில் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.