தமிழகத்தில் திரையங்கு கட்டணத்தை உயர்த்தி கொள்வதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது!

289

தமிழகத்தில் திரையங்கு கட்டணத்தை உயர்த்தி கொள்வதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் மல்டிபிளக்ஸ் திரையங்குகளில் அதிகபட்சமாக 160 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதேபோன்று, சென்னையை தவிர்த்து மற்ற நகரங்களில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையங்குகளில் 140 ரூபாய் வரையும் கட்டணமாக வசூலித்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சிகளில் உள்ள ஏசி திரையங்குகளில் அதிகபட்சமாக 50 ரூபாயும், நகராட்சிகளில் உள்ள ஏசி திரையங்குகளில் 40 ரூபாயும் கட்டணமாக வசூலித்து கொள்ளலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பேரூராட்சிகளில் உள்ள திரையங்குகளில் 20 ரூபாயும், ஊராட்சி பகுதிகளில் உள்ள திரையங்குகளில் 15 ரூபாயும் கட்டணமாக வசூலித்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கட்டணம் உயர்வு வரும் ஒன்பதாம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.