தமிழக அரசின் வழக்கறிஞர் ராஜரத்தினம் ராஜினாமா: அரசு தலைமை வழக்கறிஞர்கள் சிலரும் பதவி விலக முடிவு

159

தமிழக அரசின் குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ராஜரத்தினம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தமிழக அரசுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் குமாரிடம், வழக்கறிஞர் ராஜரத்தினம் ஜூனியராக பணியாற்றினார்.இதேபோன்று அரசு ப்ளீடராக உள்ள எம்.கே.சுப்ரமணியனும், இன்று தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், புதிய வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட உள்ளதால், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் சிலரும் ஓரிரு நாளில் பதவி விலகுவார்கள் என கூறப்படுகிறது. தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரில், இவர்கள் பதவியை ராஜினாமா செய்து வருவதாக கூறப்படுகிறது.