எல்லை தாண்டியதாக கூறி தமிழக மீனவர்கள் 4 பேர் கைது : ஒரு படகையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்

241

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ள சம்பவம் மீனவ மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்வது தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்தநிலையில், புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரம் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் நான்கு பேரை சுற்றி வளைத்து கைதுசெய்தனர். அத்துடன், மீனவர்கள் பயன்படுத்திய ஒரு படகையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் நான்கு பேரையும் காங்கேசன் துறைமுகம் அழைத்துச்சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். எல்லை தாண்டியதாக கூறி தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவ மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.