தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பெப்சி பேச்சு வார்த்தையில் சுமுக தீர்வு : இன்று முதல் படப்பிடிப்புகள் வழக்கம்போல் நடைபெறும்.

561

தயாரிப்பாளர் சங்கம்-பெப்சி இடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக பெப்சி அறிவித்துள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ஏற்பட்ட மோதலை அடுத்து, கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் பெப்சி வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 12 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில், காலா, மெர்சல் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பலமுறை பெப்சி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக பெப்சி அறிவித்துள்ளது. இதனையடுத்து, இன்று முதல் பெப்சி தொழிலாளர்கள் படப்பிடிப்பில் பணியாற்றுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெப்சி வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, கடந்த ஆகஸ்ட் 31 முதல் நிறுத்தி வைக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் படப்பிடிப்புகள் இன்று முதல் தொடங்குகிறது.