டெங்கு தடுப்பு குறித்து அமைச்சர்கள் ஆய்வு போர்கால அடிப்படையில் பணிகள் நடைபெறுவதாக அறிவிப்பு!

293

தமிழகத்தில் போர்கால அடிப்படையில் நோய்கள் பரவாமல் தடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை ராணி அண்ணாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வாசிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலுமணி, தமிழகத்தில் போர்கால அடிப்படையில் நோய்கள் பரவாமல் தடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் நோய்கள் குறித்து ஆய்வுகள் செய்து வருவதாக குறிப்பிட்ட அவர், சுய உதவி குழு மற்றும் பள்ளிகள் மூலமாக டெங்கு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.