நடிகை பாவனாவிற்கும் திரைப்பட தயாரிப்பாளர் நவீனுக்கும் திருமண நிச்சயதார்த்தம்

507

நடிகை பாவனாவிற்கும் திரைப்பட தயாரிப்பாளர் நவீனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் திருச்சூரில் உள்ள பாவனாவின் வீட்டில் ரகசியமாக நடைபெற்றது.
நடிகை பாவனா கன்னட சினிமா தயாரிப்பாளர் நவீன் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இதற்கு பாவனாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், இவர்கள் திருமணம் தள்ளிப்போனது. இதையடுத்து நேற்று திருச்சூரில் உள்ள பாவனாவின் வீட்டில் வைத்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் ரகசியமாக நடைபெற்றது. இந்த ஆண்டு இறுதியில் பாவனாவின் திருமணம் நடக்கும் என்றும் அதன் பிறகும் பாவனா சினிமாவில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிச்சயதார்த்த விழாவில் நடிகை மஞ்சு வாரியர் மற்றும் பாவனாவின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.