காஷ்மீரில் பனிச் சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் திருப்பாண்டி குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

233

காஷ்மீரில் பனிச் சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் திருப்பாண்டி குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் புனவாசல் கிராமத்தை சேர்ந்த திருப்பாண்டி என்பவர் காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போது, பனிச்சரிவில் சிக்கி பலியானார்.
அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள தமிழக அரசு, திருப்பாண்டியின் குடும்பத்துக்கு உடனடியாக 20 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது.