தமிழகத்தில் பகல் ஒரு மணி நிலவரப்படி 40% வாக்குகள் பதிவு

141

மக்களவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பகல் ஒரு மணி நிலவரப்படி தமிழகத்தில் 40 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்தன.

மக்களவைத் தேர்தலில் இரண்டாம் கட்டமாகத் தமிழகம் உட்பட 12மாநிலங்களில் 95மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 38மக்களவைத் தொகுதிகளுக்கும், 18சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நடைபெறும் தேர்தலில் பகல் ஒரு மணி நிலவரப்படி 40விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்ததாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரத சாகு தெரிவித்தார்.